#தஞ்சை || மாணவி மதமாற்றம் விவகாரம் : வீடியோ எடுத்த நபர் எங்கே? அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை.! - Seithipunal
Seithipunal


தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி உடலை பெற்றோர்கள் பெற்றுக்கொண்டு அடக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது 

தஞ்சை, திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கிருஸ்துவ பள்ளியில் படித்துவந்த மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மேலும் தன மரணத்துக்கு காரணம், மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டதாக மரண வாக்குமூலம் கொடுத்துள்ளதாக ஒரு காணொளி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று, அவரின் தந்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி அவர்கள், "மாணவி பேசிய வீடியோவின் உண்மைத்தன்மை சோதிக்கப்பட்டதா?" என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது தமிழக அரசு தரப்பு, பள்ளி ஊழியர்கள், மாணவர்கள், செவிலியர்கள் உள்பட 37 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வீடியோ பதிவு செய்த முத்துவேல் என்பவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என மாணவியின் தந்தை விளக்கமளித்தார்.

இதனை அடுத்து  நீதிபதி அவர்கள், மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் அலுவலகத்தில், செல்போன் வீடியோ பதிவை போலீசார் வழங்க வேண்டும் என்றும், வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வருகின்ற இருபத்தி ஏழாம் தேதி அறிக்கை தர தடைய அறிவியல் இயக்குனருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

THANAJAI SCHOOL GIRL SUICIDE CASE ISSUE 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->