தமிழ் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் - இனி வேந்தருக்கு பதில் அரசு..! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்றக் கூட்டத் தொடரில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மசோதா ஒன்றை தாக்கல் செய்தற். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- 

தமிழ்ப் பல்கலைக்கழக சட்டம்-1982-ல் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில், அந்த சட்டத்தில் வேந்தர் என்ற சொல்லுக்கு பதிலாக அரசு என்ற வார்த்தை சேர்க்கப்பட வேண்டும். 

குஜராத், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமனம் செய்வதற்கு அரசுக்கு அதிகாரம் வழங்க முடிவு செய்தது. 

அதேபோல், தமிழகத்தில் உள்ள 12 பல்கலைக்கழகங்களின் சட்டங்களை திருத்தம் செய்வதற்காக கடந்த ஏப்ரல் 25-ந் தேதியன்று சட்டசபையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 

அதன் படி, தமிழ்ப் பல்கலைக்கழக சட்டம்-1982-ல் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது" என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாக்கள் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் குரல் வாக்கெடுப்பிற்குப் பின்பு நிறைவேறியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thamizh university law change in assembly meeting


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->