தாளவாடியில் இன்று கடை அடைப்பு போராட்டம்: பின்னணியில் அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


தாளவாடியில் வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதாகவும் விவசாயிகளை தாக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நேற்று தாளவாடியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். 

சத்தியமங்கலம் காட்டில் உள்ள வனவிலங்குகள் அடிக்கடி தண்ணீர் மற்றும் உணவுக்காகவும் காட்டை விட்டு வெளியேறி விவசாய நிலத்திற்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் விவசாயிகளை தாக்குவது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. 

இது குறித்து தாளவாடி பகுதியைச் சேர்ந்த மக்கள் வனத்துறையினருக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினார். 

இந்நிலையில் நேற்று மாக்கையன் என்ற விவசாயி, விவசாய தோட்டத்தில் காவலில் இருந்தபோது யானை தாக்கி உயிரிழந்து விட்டார். 

இதனை அடுத்து விவசாயின் உடல் பிரேத பரிசோதனை செய்த பிறகு உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என எனவும் யானைகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டும் எனவும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு இடையே இன்று வனத்துறையினரை கண்டித்து உயிரிழந்த விவசாயி குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையை அதிகரித்து கொடுக்க வேண்டும், வனவிலங்குகளிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் உள்ளிட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றனர். 

தாளவாடி விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வணிகர்கள் இன்று கடையடைப்பு செய்துள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thalawadi shop closure protest 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->