அரசின் ராஜ தந்திரம் வீண்! TET ஆசிரியர்கள் தொடரும் என அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களின் தொடர்பு போராட்டமானது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து உள்ள நிலையில் அவர்களுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு வெட்டப்படாததால் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடைநிலை ஆசிரியர்கள், தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் டெட் தேர்வு ஆசிரியர்கள் என 3 பிரிவுகளை சேர்ந்த ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதில் டெட் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் தங்கள் தரப்பிலிருந்து இரண்டு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை எண் 149 ரத்து செய்ய வேண்டும், தங்களுக்கும் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என இரு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் டெட் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் டெட் தேர்வு எழுதிய ஆசிரியர் அனைத்து ஆசிரியர்களுக்கும் அரசு பள்ளிகளில் தற்காலிக பணி வழங்க தயார் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி தெரிவித்துள்ளார்.

அதனை ஏற்க மறுத்த டெட் தேர்வு எழுதி ஆசிரியர் சங்கத்தினர் தங்களைத் தொகுப்பு ஊதியம் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் எனவும், 2 ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்ததை அரசு அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் அவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tet teachers continue protest temporary job rejects


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->