தலைநகரில் மீண்டும் பயங்கரம் ..நள்ளிரவில் குத்துச்சண்டை வீரரை ஓட ஓட வெட்டி கொன்றமர்ம கும்பல்! - Seithipunal
Seithipunal


சென்னை திருவல்லிக்கேணி அருகே நள்ளிரவில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த குத்துச்சண்டை வீரரை மர்ம கும்பல் ஒன்று ஓட ஓட வெட்டி கொன்றுள்ளது.முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில்  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணி ராஜாஜி நகர் கிருஷ்ணாம்பேட்டை மயான பூமி அருகே வசித்து வருபவர்  ராஜேஷ்,இவருடைய மனைவி ராதா ,இந்த தம்பதியரின் ஒரே மகன் தனுஷ் ,24 வயதான தனுஷ் குத்துச்சண்டை வீரராக உள்ளார்.மேலும்  இவர் தமிழ்நாடு சார்பில் பல்வேறு போட்டிகளில் கலந்து பதக்கம் வென்றுள்ளார். மேலும் காவல்துறை தேர்வுக்கு தனுஷ் தயாராகி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏரியாவில் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதன் காரணமாக  தனுஷ் காவல்துறை வேலைக்கு செல்ல முடியாமல் போயுள்ளது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த தனுஷை மர்ம கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி வெட்டி கொன்றுள்ளது. இதனால் அந்த பகுதியில் நள்ளிரவில் பரபரபரனது,இதை தடுக்க சென்ற அவரது நண்பர் அருணையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஐஸ் ஹவுஸ் போலீசார் தனுசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த அவரது நண்பர் அருணையும் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் முன் விரோதம் காரணமாக தனுஷ் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நள்ளிரவில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த குத்துச்சண்டை வீரரை மர்ம கும்பல் ஒன்று ஓட ஓட வெட்டி கொன்றுள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Terror in the capital again Boxer hacked to death in the middle of the night


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->