தூத்துக்குடியில் பயங்கர தீ விபத்து...! 5 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமான சோகம்...! - தாளமுத்துநகர் காவலர்கள் தீவிர விசாரணை...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட லூர்தம்மாள்புரம் அருகேயுள்ள திருவள்ளூர்புரம் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஐந்து குடும்பங்களின் வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருவள்ளூர்புரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. அவற்றில் பெரும்பாலான வீடுகள் ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளால் மேற்கூரை அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அருகிலுள்ள கிறிஸ்தவ கல்லறை வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளுக்கு சிலர் தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென பரவி அருகிலிருந்த குடியிருப்பு வீடுகளையும் சூழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த தீ விபத்தில் கருப்பசாமி, ஆறுமுககனி, மேரி, ராமலட்சுமி மற்றும் மடோனா ஆகியோரின் வீடுகள் முழுமையாக தீக்கிரையாகின.

வீடுகளில் இருந்த பீரோ, கட்டில், மிக்ஸி உள்ளிட்ட அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சாம்பலானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, தீயின் வெப்பம் அதிகரித்ததால் ஒரு வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளை பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும், இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பதற்றமான சூழல் நிலவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற தூத்துக்குடி தீயணைப்புத் துறையினர் நான்கு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக தாளமுத்துநகர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, குப்பைகளுக்கு தீ வைத்ததாகக் கூறப்படும் நபர்கள் யார், எந்த சூழ்நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Terrible fire accident Thoothukudi 5 houses completely burnt down and destroyed Thalamuthunagar police investigating intensively


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->