கொப்பரைத் தேங்காய் மற்றும் தோதாபுரி மாம்பழ கொள்முதலுக்கு மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..! - பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி...!
Central government approves procurement copra and Dotapuri mangoes Nayinar Nagendran thanks Prime Minister Modi
தமிழக விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி மத்திய அரசு அறிவித்துள்ள தோத்தாபுரி மாம்பழம் மற்றும் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் திட்டத்தை வரவேற்று, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், "தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் உயரிய நோக்கத்துடன், ஒரு குவிண்டால் தோத்தாபுரி மாம்பழத்தை ரூ.1,545 என்ற ஆதரவு விலையில் மொத்தம் 96 ஆயிரத்து 879 டன் அளவிலும், ரூ.1,049 கோடி மதிப்பில் 8 ஆயிரத்து 226 டன் கொப்பரைத் தேங்காயையும் ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய மத்திய அரசு எடுத்துள்ள முடிவு, விவசாயிகளின் எதிர்காலத்திற்கு புதிய நம்பிக்கையையும் உறுதியையும் அளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டு தமிழக விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்திய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, "சந்தையில் மாம்பழத்தின் விலை கடுமையாக சரிந்ததன் காரணமாக, தங்களின் உழைப்பின் பலனாக விளைந்த மாம்பழங்களை விற்பனை செய்ய முடியாமல் டன் கணக்கில் கொட்ட வேண்டிய வேதனைக்குரிய சூழலுக்கு தமிழக விவசாயிகள் தள்ளப்பட்டிருந்தனர்.
அந்த நெருக்கடியிலிருந்து அவர்களை மீட்டெடுத்து, உழைப்புக்கேற்ற நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த கொள்முதல் நடவடிக்கை, தமிழகத்தின் கிராமப்புற பொருளாதாரத்திற்கு புத்துணர்ச்சியையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு புதிய வலிமையையும் அளிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, "ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் விவசாயிகளை மையமாகக் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களையும், வேளாண் வளர்ச்சிக்கான முன்னேற்ற நடவடிக்கைகளையும் தொடர்ந்து செயல்படுத்தி வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக விவசாயிகளின் நம்பிக்கைக்குரிய தலைவராக திகழ்கிறார்.
விவசாயிகளின் நலனுக்காக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு ஒட்டுமொத்த தமிழகமும் நன்றியுணர்வுடன் இருக்கும்" என நயினார் நாகேந்திரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Central government approves procurement copra and Dotapuri mangoes Nayinar Nagendran thanks Prime Minister Modi