மாமியாரின் கண்டனத்தால் மனமுடைந்த ஆசிரியை...! - தற்கொலை செய்து கொண்ட சோகச் சம்பவம்...! நடந்து என்ன...?
Teacher upset by mother in laws condemnation Tragic incident of suicide What happened
குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த மகேஷ் (34) கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் உள்ள ஒரு கால் சென்டரில் வேலை பார்த்தபோது, அதே நிறுவனத்தில் பணிபுரிந்த மராட்டியாவைச் சேர்ந்த லேகா (32) என்பவரை காதலித்தார். இருவரும் பின்னர் ஊருக்கு வந்து குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

தம்பதியருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.திருமணத்திற்குப் பிறகு மகேஷ் சத்தீஸ்காரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்காக சென்று விட்டார். மேலும், லேகா அஞ்சுகிராமத்தில் கணவர் வீட்டில் தங்கியிருந்து அருகிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவருடன் கணவரின் தாயாரும் வசித்து வந்தார்.இந்த நிலையில், வீட்டுப் பணிகளை முறையாகச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில் மாமியார் லேகாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லேகா, நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் வீட்டில் சேலையால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்த தகவல் அறிந்ததும் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Teacher upset by mother in laws condemnation Tragic incident of suicide What happened