பள்ளி வளாகத்திலேயே கொலைசெய்யப்பட்ட ஆசிரியை.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


பள்ளி வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அது மட்டுமே தனது கையில் வைத்துக் கொண்டு வந்த நபர். அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ரதிதேவி வயது 33 குறித்து காவலாளியிடம் விசாரித்துள்ளார். மூன்றாவது மாடியில் உள்ள எட்டாம் வகுப்பில் ரதிதேவி சமூகவியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அங்கு நேராக சென்றார்.

அந்த நபர் அவரைப் பார்த்ததும் ரதிதேவி அதிர்ச்சி அடைந்தார். ஆசிரியை நெருங்கி வந்த அந்த நபர் கையில் வைத்திருந்த ஹெல்மட்டால்  தலையில் ஓங்கி அடித்துள்ளார் பின் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். மாணவர்கள் அலறி அடித்து ஓட தொடங்கியுள்ளனர்.

உடனே அந்த நபர் தனது ஹெல்மெட்டிற்குள் மறைத்து வைத்திருந்த ஸ்குரு டிரைவர் மற்றும் கத்தியை எடுத்தார். இதை பார்த்த ரதிதேவி சுதாரிப்பதற்குள் ஈவு இரக்கமின்றி கத்தி மற்றும் ஒரு டிரைவரால் அவரை தலை மற்றும் வயிறு பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.  ரத்தவெள்ளத்தில் வகுப்பறையிலேயே ரதிதேவி விழுந்தார்.

பின்னர் அங்கிருந்து வேகமாக வந்த அருகில் இருந்த ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதித்தார்கள் சிகிச்சை பலனின்றி ரதிதேவி இறந்தார். இதுகுறித்து விசாரித்த காவல்துறை கொலை செய்தவன் ரதிதேவியின் கணவர் குருமுனீஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஓராண்டிற்கு முன்பு ரதிதேவி கணவரை விட்டுப் பிரிந்துள்ளார். பின்னர் தனது குழந்தைகளுடன்  ராமநாதபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். அங்கேயே ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டுள்ள்து.

சில தினங்களுக்கு முன்பு ஒருமுறை குருமுனீஸ்வரன் ராமநாதபுரம் வந்துள்ளார். அங்கு மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார் அதற்கு ரதிதேவி மறுப்பு தெரிவித்துள்ளார் இதனால் அப்போது  இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் குருமுனீஸ்வரன் தனது மனைவியை வேலை பார்த்து வந்த பள்ளிக்கூடத்திற்கு சென்று ரதிதேவியை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teacher murdered in the school


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal