வகுப்பறையில் பள்ளி மாணவியிடம் அத்து மீறிய ஆங்கில ஆசிரியர் - தேனியில் பயங்கரம்.!!
teacher arrested fir harassment in theni
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ரஞ்சித் குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு வகுப்பறையில் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும், மாணவியின் செல்போனுக்கு பாலியல் ரீதியாக குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் தகவல் வெளியானது.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள், ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் ரஞ்சித் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வகுப்பறையில் பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
teacher arrested fir harassment in theni