மயிலாடுதுறையில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு! ஆசிரியரை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்!  - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை அருகே 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி ஆசிரியரை பிடித்து மணல்மேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள் பள்ளிக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு உண்டானது. நாகை மாவட்டம் மணல்மேடு அருகே முடிகண்டநல்லூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் கேசிங்கன் கிராமத்தை சேர்ந்த பிரேம்குமாh(28) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

இவர் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துவந்ததாகவும் அந்த மாணவியை செல்போனில் படம் எடுத்து மிரட்டியதாக குற்றம் சாட்டி பெற்றோர் மற்றும் உறவினர்கள் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். 

பிரேம்குமார் புதுமை படைக்கும் ஆசிரியர் விருது பெற்றதாக பள்ளியில் வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்தனர். தொடர்ந்து ஆசிரியரை பிடித்து அடித்து உதைத்து மணல்மேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மாணவர்களை வெளியேற்றி விட்டு பள்ளிக்கு பூட்டு போட்டு பூட்டினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணல்மேடு போலீசார் ஆசிரியர்பிரேம்குமாரை மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பேட்டி : தீபா, கிராமவாசி, முடிகண்டநல்லூர்.

செய்தியாளர் : மணி 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher arrest for sexual harassment case in mayiladuthurai


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal