12-ந் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்!
Tasmac shops to remain closed on May 12
சித்ரா பவுர்ணமியையொட்டி,வருகின்ற 12-ந் தேதி திருவண்ணாமலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவு தெரிவித்து உள்ளார்.
திருவண்ணாமலை சிவாலயத்தில் ஆண்டுக்கு நான்கு முறை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகின்ற பிரம்மோற்சவம் சிறப்பானதாகும். இந்தப் பிரம்மோற்சவ விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் பத்தாம் நாள் கார்த்திகை தீபத் திருநாளாகும். அந்நாளில் சிவாலயத்திற்கு வந்து, திருவண்ணாமலையை வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். மலையின் உச்சியில் இந்தத் தீபம் ஏற்றப்படுகிறது. இதனை மகா தீபம் என்று அழைக்கின்றனர்.
இந்தநிலையில் சித்ரா பவுர்ணமி வருகிற 11-ந் தேதி இரவில் தொடங்கி 12-ந் தேதி இரவில் நிறைவடைகின்றது.இந்த சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் அன்றைய தினம் கிரிவலம் செல்ல உள்ளனர்.
இதையொட்டி திருவண்ணாமலை தாலுகா மற்றும் நகர பகுதிக்கு அருகாமையில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடை, மணலூர்பேட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை, வேங்கிக்கால் புறவழிச்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை, சமுத்திரம் பகுதியில் உள்ள மதுபான கடை, திருவண்ணாமலை நகரத்தில் இயங்கி வரும் மதுபான கடைகளுடன் இணைந்த மதுக் கூடங்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி, வேங்கிக்கால் எம்.எல். 4 ஏ உரிமம் பெற்ற மதுபான கடைகள், மதுக்கூடங்களுக்கு வருகிற 12-ந் தேதி மது விற்பனை நடைபெறாமல் விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்து உள்ளார்.
English Summary
Tasmac shops to remain closed on May 12