#TASMAC || அனைத்து வகை மதுபானங்களும் ரூ.20 வரை உயர்வு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக் மூலம் தமிழக முழுவதும் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சட்டமன்ற கூட்டத்துடன் போது டாஸ்மாக் வருமானம் ரூ. 50,000 கோடி வரை உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதனை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மதுபானங்களின் விலையை அவ்வப்போது தமிழ்நாடு அரசு உயர்த்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது அனைத்து வகையான மதுபானங்களின் விலையையும் 20 ரூபாய் வரை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில் மதுபானங்கள் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதன் அடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது எனவே 180 மி.லி அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.

180 மி.லி அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. 650 மி.லி அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375 மி.லி, 750 மி.லி, 1000 மிலி‌ கொள்ளளவுகளில் விற்பனை செய்யப்படும் மதுபான ரகங்களும், 325 மி.லி, 500 மி.லி கொள்ளளவுகளில் விற்பனை செய்யப்படும் நீர் வகைகளும் அந்தந்த ரகத்திற்கு மற்றும் கொள்ளளவுக்கு ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasmac liquor price hike from Feb1


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->