டாஸ்மாக் மதுபான காலி பாட்டில்கள் விவகாரம்.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி.!! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றம் வன பாதுகாப்பு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்தது. மலைவாச தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை கூடுதலாக பத்து ரூபாய்க்கு விற்று விட்டு, பின்னர் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்தது.

பாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதால் விலங்குகள் பாதிக்கப்படுவதை தடுக்க இது சம்பந்தமாக திட்டம் வகுக்க வேண்டும் எனவும் தவறினால் மலைவாச தலங்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்ட உள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் பாட்டில்கள் திரும்ப பெற படுவதாகவும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, அப்படியானால் இந்த திட்டத்தை ஏன் தமிழகம் முழுவதும் அமல்படுத்த கூடாது.? என்ற கேள்வியை நீதிபதிகள் முன் வைத்தனர். மாவட்ட ஆட்சியரும் ,டாஸ்மாக் மேலாளர் அதிரடி சோதனை மேற் கொள்ளுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இது தற்போதுதான் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac liquor bottle case


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->