காந்தி ஜெயந்தி டாஸ்மாக் விடுமுறை எதிரொலி.. முண்டியடித்து மது வாங்கிய குடிமகன்கள்.! - Seithipunal
Seithipunal


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று டாஸ்மாக் விடுமுறை என்பதால் நேற்று முண்டியடித்துக்கொண்டு மதிப்பிரிகள் சரக்கு வாங்கி சென்றுள்ளனர்.

பொதுவாக விடுமுறை தினம் என்றாலே டாஸ்மாக்களில் வசூல் வேட்டை எக்கச்சக்க அளவில் இருக்கும். அதிலும், டாஸ்மாக்கிற்கு விடுமுறை என்றால் கேட்கவே தேவையில்லை. முதல் நாள் மது பிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு சரக்குகளை வாங்கி வைத்து விடுவார்கள். 

இதனால், டாஸ்மாக் வசூல் பல கோடிகளில் கிடைக்கும். அந்த வகையில் இன்று காந்தி பிறந்த நாள் என்ற காரணத்தால் டாஸ்மாக் மற்றும் கறி கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று டாஸ்மாக்களில் கடுமையான கூட்ட நெரிசலும் அதிகப்படியான மது பிரியர்களின் கூட்டமும் இருந்துள்ளது. 

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டை பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து மது பாட்டில்களை வாங்கி சென்றுள்ளனர். மணலூர்பேட்டை மற்றும் சுரையப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மது பிரியர்கள் குவிந்துள்ளனர். 

கடை மூடுகின்ற நேரத்தில் முண்டியடித்து தேவையான சரக்கு பாட்டில்களை வாங்கி சென்றனர். இதனால், அப்பகுதியில் கூட்டம் மிகுதியாக காணப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasmac leave yesterday tasmac very crowded


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->