டாஸ்மார்க் கடையில் மது அருந்துவதற்கு பணம் தர மறுத்த தாயை, மகனே கொடூரமாக அடித்து உதைத்த சம்பவம்! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி அருகே மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில், பெற்ற தாயை நண்பர்களுடன் சேர்ந்து தாக்கிய மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், இலந்தவிளை பகுதியை சேர்ந்தவர் மேரி மார்கிரட். இவரின் மகன் ஷர்லின் ஜோஸ் மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவர், அடிக்கடி வீட்டில் இருக்கும் பணம், தாயிடம் இருக்கும் பணத்தை மிரட்டி பறித்து மது குடித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ள ஷர்லின் ஜோஸ், மதுபோதையில் ரகளையில் ஈடுபடுவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவம் நடந்த நேற்று தனது தாயிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டு உள்ளார் ஷர்லின் ஜோஸ். ஆனால் தாயோ தன்னிடம் பணம் இல்லை. நீ குடிப்பதற்கு பணம் தர முடியாது என்று மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஷர்லின் ஜோஸ், தனது நண்பர்களை அழைத்து வந்து தனது தாயை கொடூரமாக தாக்கியுள்ளார். அப்போது அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வரவே, இதனை பார்த்த ஷர்லின் ஜோஸ் மற்றும் அவனின் நண்பர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

படுகாயம் அடைந்த மேரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள ஷர்லின் ஜோஸ் மற்றும் அவனின் நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TASAMAC Kanniyakumari Son Attach Mother


கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?
Seithipunal