மக்களே உஷார்... தமிழகத்தில் இன்று 14 இடங்களில் சதம் அடித்த வெயில்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று 102 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, 

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நாளை முதல் 07.04.2024 வரை தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம் முழுவதும் இன்று 14 இடங்களில் சதம் அடித்துள்ள வெயில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 106 டிகிரி பதிவாகியுள்ளது. 

அதன்படி ஈரோடு 106 பரமத்தி வேலூர்105, தர்மபுரி, திருச்சி, மதுரை, திருப்பூர், மதுரை 103 டிகிரி சேலம், நாமக்கல், வேலூர் மாவட்டங்களில் 102 டிகிரியும் திருத்தணி, கோவை, சென்னை மீனம்பாக்கம் பகுதியில் 101 டிகிரி, தஞ்சாவூர் மாவட்டம் பகுதியில் 100 டிகிரி வெயிலும் கொளுத்து வாங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu weather report 04042024


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->