தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
TamilNadu today heavy rain in 23 districts
தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை மழை பெய்யக்கூடும்.

அந்த வகையில் இன்று கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், கரூர், திருச்சி ஆகிய 23 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் கனமழை செய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
TamilNadu today heavy rain in 23 districts