சொத்துப் பதிவில் புதிய அதிரடி: அசல் ஆவணம் இனி கட்டாயம்! குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
tamilnadu soththu pathivu new law
தமிழகத்தில் போலிப் பத்திரப் பதிவுகளைத் தடுக்கவும், சொத்து உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்கவும் கொண்டுவரப்பட்ட மிக முக்கியமான மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இனி சொத்துகளைப் பதிவு செய்யும்போது அசல் ஆவணங்களைத் (Original Documents) தாக்கல் செய்வது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாறுபட்ட சூழல்களுக்கான புதிய விதிகள்:
பத்திரம் பதிவின் போது அசல் ஆவணம் இல்லையென்றால், பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:
மூதாதையர் சொத்து: உங்களிடம் மூலப்பத்திரம் (Parent Document) இல்லாத பட்சத்தில், வருவாய்த்துறை வழங்கிய பட்டாவை (Patta) ஆதாரமாகச் சமர்ப்பிக்கலாம்.
அடமானச் சொத்து: உங்கள் சொத்து வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் அடமானத்தில் இருந்தால், அங்கிருந்து முறையான தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
பத்திரம் தொலைந்துவிட்டால்: 1. காவல்துறையில் புகாரளித்து ‘கண்டறிய முடியவில்லை’ (Non-Traceable Certificate) என்ற சான்றிதழைப் பெற வேண்டும்.
2. உள்ளூர் நாளிதழ் ஒன்றில் பத்திரம் காணாமல் போனது குறித்து விளம்பரம் செய்து, அதனையும் பதிவின் போது தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த அதிரடி மாற்றம் சொத்து விற்பனை மற்றும் வாங்குதலில் நடக்கும் மோசடிகளை முற்றுப்புள்ளி வைத்து, வெளிப்படைத்தன்மையைக் கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
tamilnadu soththu pathivu new law