தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு-எதெற்கெல்லாம் அனுமதி.! எதெற்கெல்லாம் மறுப்பு.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்திருந்தது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு. அந்த வகையில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் சில  கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு.

இந்நிலையில் ஞாயிறு முழு ஊரடங்கான இன்று அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் இயங்காது. டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காய்கறி-மளிகை கடைகள், இறைச்சி கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் போன்றவையும் செயல்படாது.

அத்தியாவசியமான மருத்துவம், பால், மற்றும் பத்திரிக்கை பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், வெளியூரிலிருந்து தொலைதூர பேருந்துகள் ரயில்களில் வரும் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் ஆட்டோ வாடகைக்காரர்கள் நிபந்தனைகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று, முகூர்த்த நாள் என்பதால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெற உள்ளது. ஏற்கனவே, சுபநிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பை மீறியும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வெளியே தேவையில்லாமல் சுற்றித் திரிந்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அதையும் மீறி தேவை இல்லாமல் வெளியே சுற்றித் திரியும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu govt permit lockdown


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->