பரபரப்புக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்திக்கும் தமிழக ஆளுநர் - இது தான் காரணமா? - Seithipunal
Seithipunal


இந்தியாவின் போதைப்பொருள் தலைநகரமாக தமிழகம் மாறியிருக்கிறது. சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவனும், திமுகவின் முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவர் தலைமறைவாக உள்ளார். இதையடுத்து தேசிய போதைப்பொருள் கட்டுப்பட்டு ஆணையம் திமுக நிர்வாகிகளின் நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகிறது. 

தமிழகத்துக்குக் கடத்தப்படவிருந்த ரூ.1200 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் குஜராத் கடற்பகுதியிலும், ரயிலில் கடத்தப்பட்ட 30 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப் பொருள், மதுரையிலும் கைப்பற்றப்பட்டது. இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் என்பது தெரிய வந்தும் முதல்வர் ஸ்டாலின் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார்‌. 

இந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்தும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த உள்ளது‌.

இந்த நிலையில் போதைப்பொருள் அதிகரிப்பது குறித்து இன்று காலை 9 மணி அளவில் தமிழக ஆளுநர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அவர் என்ன பேச உள்ளார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu government rn ravi press meet today


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->