கிராம உதவியாளர்களை மற்ற பணிகளில் ஈடுபடுத்த கூடாது - தமிழக அரசு அதிரடி.!
tamilnadu government order village assistant include other works
கிராம உதவியாளர்களை மற்ற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் நடராஜன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தெரிவித்து இருப்பதாவது:-
"வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம், தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம், தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம பணியாளர் சங்கம் உள்ளிட்டவை கிராமத்தில் இருந்து பணியாற்றும் மாற்றுப்பணி நியமனங்களை அதாவது கிராம பணி அல்லாத அலுவலக பணிகள், ஆய்வு மாளிகை, புத்தக திருவிழா போன்ற பிற பணிகளில் ஈடுபடுவதை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர்.
மேலும், தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம ஊழியர் சங்கம், கடந்த ஜனவரி மாதம் கொடுத்த மனுவில் கிராம உதவியாளர்களை கிராம பணியை மட்டும் பார்க்க அனுமதியுங்கள். கிராம பணியை தவிர மாற்று பணிக்கு பயன்படுத்த கூடாது.
கிராம உதவியாளர்களின் பணி தன்மையை வெளியிட வேண்டும் என்று கேட்டு கொண்டு உள்ளனர். ஆகவே கிராம நிர்வாக பணிக்கு தவிர இதர பணிகளுக்கு பயன்படுத்தி வருவதை தடுப்பது தொடர்பாக, கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றிட கலெக்டரின் கீழ் நிலை உள்ள அலுவலகர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்த வேண்டும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tamilnadu government order village assistant include other works