தமிழக மீனவர்கள் 6 பேர் கைது.!! இலங்கை கடற்படை அட்டூழியம்.!! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மற்றும் கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், சிறை பிடித்துச் செல்வதும், மீனவர்களின் உடைமைகளை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாம்பட்டினத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜகதாம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் விசை படகியில் இன்று அதிகாலை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத்தண்டு தாண்டி மீன்பிடித்ததாக கூறி 6 பேரை கைது செய்ததோடு அவர்கள் பயணம் செய்த விசைப்படகையும் பறிமுதல் செய்து காங்கேயம் கடற்படை தளத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu fishermen 6 persons arrested by Srilankan navy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->