அரசு பள்ளிகளுக்கு ரூ. 2000 வழங்க கல்வித்துறை முடிவு.!
tamilnadu educational department allounce two thousand amount each govt school
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம், மாணவர்கள் பாதுகாப்புடனும், சுகாதாரத்துடனும் இருப்பார்கள் என்பதன் அடிப்படையில், கல்வித்துறை சார்பில் தூய்மை பணிக்காக பள்ளி ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க உள்ளது.

அந்த வகையில், தமிழகம் முழுவதும் உள்ள 31 ஆயிரத்து 210 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.6 கோடியே 24 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை கொண்டு அரசு பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் போன்றவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
இந்த பணிகள் பள்ளிகளில் முறையாக மேற்கொள்ளப்பட்டு உள்ளதா? என்பதை மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
English Summary
tamilnadu educational department allounce two thousand amount each govt school