கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சலால்.. தமிழகத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை-ராதாகிருஷ்ணன்.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் பரவிவரும் தக்காளி காய்ச்சலால் 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை குறி வைத்துத் தாக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக உடலின் தோல் பகுதியில் தக்காளி போன்ற சிவப்பு நிற திட்டுக்கள் ஏற்படுவதால் இது தக்காளி வைரஸ் காய்ச்சல் என அழைக்கப்படுகிறது.

இந்த தக்காளி காய்ச்சல் பாதிப்பு காரணமாக கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் வைரஸ் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

அது ஒரு சாதாரண வைரஸ் தான் தக்காளிக்கும், இந்த வைரஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்டு குணமான குழந்தைகளுக்கு இந்த நோய் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் இது பரவ வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் கொசுக்களை ஒழிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தக்காளி வைரஸ் குறித்து தமிழக மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu don't fear tomoto Virus fever


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->