#BREAKING | தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறையா? அறிவிப்பை வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்?! பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதாகவும், விடுமுறை அளிப்பது குறித்த அறிவிப்பு இன்று மதியத்திற்குள் வெளியாகலாம் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 24-ஆம் தேதி திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு முந்தைய நாள்களான இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) வழக்கமான அரசு விடுமுறை நாள்களாகும். 

திங்கள்கிழமை தீபாவளி என்பதால் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு மறுநாளும் (செவ்வாய் - அக்.25) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் இன்று மதியத்திற்குள் வெளியிடுவார் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, புதுச்சேரியில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள்(அக்.25) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu Diwali holiday Info 2022


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->