அட..நம்ம தமிழ்நாட்டிலும் ஒரு பாலைவனம் இருக்கு! எங்கே ன்னு தெரியுமா?! - Seithipunal
Seithipunal


நீர் இல்லாத வறண்ட நிலப்பரப்பு தான் பாலைவனம் என்றழைக்கப்படுகிறது. இந்தியாவில் ராஜஸ்தான் மற்றும் துபாய் போன்ற அரபு நாடுகளில் உள்ள பாலைவனங்கள் அனைவருக்கும் தெரிந்த மிகவும் பிரசித்தி பெற்ற பாலைவனங்களாகும். அதேபோல் தமிழ்நாட்டிலும் ஒரு பாலைவனம் பல கிலோமீட்டர் தூரத்திற்கு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? 

ஆனால் அது உண்மை தான். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அந்த பாலைவனம் அமைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூரில் இருந்து 15 கி மீ தொலைவில் உள்ளது தேரிக்காடு. இந்த தேரிக்காடு சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. 

இந்த இடம் முழுக்க செம்மண் மட்டுமே உள்ளது. இங்கு சிவப்பு நிறத்தில் மணல் திட்டுக்கள் தானாகவே உருவாகியுள்ளன. இந்த சிவப்பு மணல்மேடுகள் தேரி என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகின்றன. இதுதான் இந்த தேரிக்காடு பெயருக்கான காரணம் என்று கூறப்படுகிறது. 

மேலும் இது சிவப்பு பாலைவனம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு செம்மண்ணாக இருப்பதற்கு, தென்மேற்குப் பருவக்காற்றானது மேற்குத் தொடர்ச்சி மலையில் மோதி, நாங்குனேரியில் உள்ள செம்மண்ணைக் கடத்தி கிழக்கு நோக்கி வீசுகிறது. மேலும் இந்த காற்று தூத்துக்குடியில் இருந்து வரும் கடல் காற்றோடு மோதி அதிலுள்ள செம்மண் மட்டும் இங்கு படிவதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu desert from Thoothukudi district


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->