அப்பட்டமான அத்துமீறலில் அரசு ஈடுபடுவதா?.. முத்தரசன் காட்டம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அஇஅதிமுக அரசின் அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திரு.ஆர்.எஸ்.பாரதி இன்று (23.05.2020) அதிகாலை நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கூறிய கருத்தின் மீது விமர்சனம் எழுந்தது. உடனடியாக ஆர்.எஸ்.பாரதி ஜனநாயகத்தின் நம்பிக்கை உள்ளவர். சட்டங்களையும், நீதிமன்றத்தையும் மதிப்பவர். இதனால் அவர் மீது முன் வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு மதிப்பளித்து, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பிரச்சினையை முடித்து வைத்தார்.

இதன் மீது அஇஅதிமுக அரசு ஒரு வழக்கு பதிவு செய்து காத்திருந்து, அரசின் ஊழல் தொடராபாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், உள்ளாட்சி துறை அமைச்சர் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  

இந்த வழக்கை திசை திருப்பி, நீதிமன்றத்தை தவறாக வழி நடத்தும் உள் நோக்கத்துடன் அஇஅதிமுக அரசு திரு.ஆர்.எஸ் பாரதியை கைது செய்திருக்கிறது. இது அப்பட்டமான சட்ட அத்துமீறலாகும். பழிவாங்கும் செயலாகும். அஇஅதிமுக அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கை வாபஸ் வாங்கி, அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார்..      

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CPI Mutharsan angry about RS Bharathi arrest


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->