தமிழக மக்கள் கவனமாக இருக்க கூறி, மாபெரும் வருத்தத்துடன் முதல்வர் பகிரங்க எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


இந்திய நாட்டில் கரோனா வைரஸிற்கு 562 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸின் அதிதீவிர பரவும் தன்மையின் காரணமாக வரும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், இந்த வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நபர்களில் பூரண நலன் பெற்று 41 பேர் இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர். 519 இந்தியர்களுக்கும், 43 வெளிநாட்டினருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் 21 நாட்களுக்கு கரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று இரவு ஏழு மணிக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றஉள்ளதாக தெரிவித்தார். இதன்படி, தற்போது தமிழக மக்களிடம் முதலவர் உரையாற்றினார். 

இதில் பேசியதாவது, அன்பான தமிழ் மக்களே.. உங்களின் அண்ணன்னாக, தம்பியாக நான் பேசுகிறேன்.. சீனாவில் துவங்கிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. இதனை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.. தமிழக அரசு சார்பாகவும், மத்திய அரசு சார்பாகவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

அன்றாடம் பணி செய்து வரும் மக்கள் என்று அனைவருக்கும் நிதியுதவி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கையை தவிர்த்து மக்கள் நிலைமையை புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டும். 

தனிமைப்படுத்துதல் உங்களின் குடும்பத்தையும், நாட்டையும், உறவினர்களையும் பாதுகாக்க உதவும்.. 21 நாட்களை விடுமுறையாக நினைக்காமல், உயிரை பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்.. அத்தியாவசிய தேவை அனைத்தும் தங்குதடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கட்டாயம் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்தால் 3 அடி தூரத்தில் நிற்க வேண்டும். 

மருத்துவமனையின் ஆலோசனையின்றி எதையும் செய்ய வேண்டாம். கொரோனா உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு சந்தேகத்தை கேட்டுக்கொள்ளுங்கள்.. வெளியே என்று வந்தால் பாரம்பரிய வழக்கப்படி கை கால்களை கழுவுங்கள்.. பாதுகாப்பாக இருங்கள்.. வதந்தி பரப்பினால், உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 

சர்க்கரை நோய், கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருங்கள். உங்களுக்கு உங்களின் குடும்பம் முக்கியம்.. அரசிற்கு தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் முக்கியம். வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருந்து உங்களையும், உங்களை சார்தவர்களையும் பாதுகாத்து கொள்ளுங்கள். கரோனாவை நாம் அனைவரும் வெற்றிகரமாக எதிர்கொள்வோம்.. இருகரம் கூப்பி வரவேற்று பாதுகாப்பாக இருங்கள்.. நன்றி என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM speech with tamil peoples


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal