#Breaking: ஏழைகளின் வீட்டில் மகிழ்ச்சி விளக்கேற்றி, அடுக்கு மொழியில் மாஸ் காண்பித்த தமிழக முதல்வர்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ கலந்தாய்வுகளை துவங்கி வைத்த போது பேசியதாவது, " இந்த நாள் எனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாள்.. இந்த நாள் தமிழகத்தின் பொன்னாள்.. அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நாள்.. அரசு பள்ளியில் பயின்ற மாணவர் என்ற முறையில் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ள நாள். இந்த நாள் வரும் வருடத்திலும் தொடரும். 

பலமுறை பிரதமர் மோடியை சந்தித்தும், கடிதம் எழுதியும் நீட் தேர்வு இரத்து செய்ய கூறி வலியுறுத்தி வருகிறேன். நீதிமன்றத்தின் உத்தரவால் இது நடந்தாலும், சட்டப்போராட்டம் தொடர்ந்து வருகிறது. நீட் தேர்வு காரணமாக பல அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவர்களாக உருவாக வேண்டும் என்ற கனவு சிதைந்தது. 

இதனைக்கருத்தில் கொண்டு, அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவர்களாக மாறும் கனவை உறுதி செய்ய, 7.5 தனி உள் ஒதுக்கீட்டை தமிழகத்தில் கொண்டு வந்தேன். அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் பொருட்டு மார்ச் மாதமே சட்டப்பேரவையில் அறிவித்தேன். 

இதனை செயல்படுத்த தனியொரு ஆணையம் அமைக்கப்பட்டு, பல தடைகளை தாண்டி ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கியுள்ளேன். இனி உங்களின் குடும்பம் மருத்துவர் குடும்பம் என்று அழைக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இந்த நடைமுறை தொடரும். 

நான் தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றதும் 1990 மருத்துவ கல்வி இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது மாபெரும் வரலாற்று சாதனை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த வருடத்தில் 6 அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்த நிலையில், தற்போது அரசின் முயற்சியால் 300 க்கும் அதிகமான இடங்கள் கிடைத்துள்ளது. 

அவரவரின் மதிப்பெண் மற்றும் திறமைக்கேற்ப மொத்தமாக உள் ஒதுக்கீட்டில் மட்டுமே 400 க்கும் அதிகமான மருத்துவ கல்வி இடங்கள் கிடைக்கும். அரசு உதவித்தொகை பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு குறித்து பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் யாருமே கூறவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்காக நாங்கள் சிந்தித்து இதனை செயல்படுத்தியுள்ளோம் " என்று தெரிவித்தார்.

முன்னதாக தமிழகத்தில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, தமிழக முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்களாக உருவாகவுள்ள மாணவர்கள் கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துக்கொண்டனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Pressmeet 18 November 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->