வழக்கறிஞர் வட்டாரத்தில் பரபரப்பு - அரசு தலைமை வழக்கறிஞர் திடீர் ராஜினாமா.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் பதவியை ராஜினாமா செய்துள்ளது வழக்கறிஞர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1989-1991ல் திமுக ஆட்சியில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றியவர் சண்முகசுந்தரம். 1996 முதல் 2001 வரை மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராக பதவி வகித்த இவர் 2002 முதல் 2008 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.

இதையடுத்து சண்முகசுந்தரம் கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். 

மேலும், ராஜினாமா முடிவை தமிழக அரசிடமும், முதலமைச்சரிடமும் தெரிவித்துவிட்டதாகவும், அரசு பொறுப்பில் இருந்து விலகி தனியாக வழக்கறிஞர் தொழிலை தொடர உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu chief advocate r sanmuga sundaram resign


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->