தமிழக பட்ஜெட் 2023: கோவையில் ரூ.172 கோடியில் "செம்மொழி பூங்கா" அமைக்கப்படும்..!! - Seithipunal
Seithipunal


2023-24ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இதில் கோவையில் ரூ.172 கோடி மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற செம்மொழி மாநாட்டின்போது, கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையை இடம் மாற்றி விட்டு, அந்த இடத்தில் சர்வதேச தரத்திலான தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது.

ஆனால் அதற்குப் பின்பு அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த காரணத்தால் இத்திட்டம் கைவிட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு, கோவை மத்திய சிறை இடம் மாற்றப்பட்டு, அந்த இடத்தில் சர்வதேச தரத்திலான செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று தெரிவித்தது.

இந்நிலையில், தமிழ்நாடு பட்ஜெட்டில் கோவையில் ரூ.172 கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு கட்டங்களாக கோவை செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu budget 2023 Semmozhi Park will be constructed in Coimbatore at a cost of Rs172 crore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->