சீமானுக்கு தமிழக பாஜக திடீர் ஆதரவு.. அண்ணாமலை பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


100 நாள் வேலைத்திட்டம் குறித்த சீமானின் கருத்தில் நியாயம் உள்ளது என பாஜக அண்ணாமலை தெரிவித்தார்.

சுதந்திரபோராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் 118 ஆவது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு, சென்னிமலையில் இருக்கும் திருப்பூர் குமரனின் இல்லத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சென்றிருந்தார். 

அங்கு, திருப்பூர் குமரனின் படத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதை தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " தமிழகத்தில் அரசியல் இலாபத்திற்காக காமராஜரை பயன்படுத்தினார்கள். அவருக்கு எதுவும் செய்யவில்லை. 

அதனால் தான் அந்த விஷயத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. இந்த விஷயத்தில் அரசியல் இல்லை. நீட் தேர்வை மக்கள் எதிர்க்கவில்லை. நீட் தேர்வை பொறுத்த வரை, ஆதாரபூர்வமான விவாதத்துக்கு பாஜக தயாராக உள்ளது. 

விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.6 ஆயிரம் கொடுத்ததில், இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் ஊழல் நடந்துள்ளது. 100 நாட்கள் வேலைத்திட்டம் குறித்து சீமான் தெரிவித்த கருத்தில் நியாயம் உள்ளது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu BJP President K Annamalai Talks about Seeman Statement for 100 Days Work Scheme


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal