தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2023 2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கான மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.

 இதில், 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அந்த வகையில் இன்று இரண்டாவது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த பட்ஜெட்டில் கரும்பு விவசாயிகள் மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் புதிய திட்டங்கள் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. இது விவசாயிகளிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu agriculture budget announce today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->