மன்னார்குடியில் சோகம்...! கடமை அழைத்த வழியில் உயிரிழந்த காவலர்…!
Tragedy Mannargudi police officer loses his life while on duty
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த காவலர் சதீஷ்குமார், அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். தினமும் போல இன்று காலைவும் அவர் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, கூத்தாநல்லூர் பகுதியில் சாலையில் எதிரே வந்த அதிவேக லாரி, சதீஷ்குமாரின் பைக்கின் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த மோதி விபத்தில் பலத்த காயமடைந்து சாலையில் தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் விரைந்து வந்த போலீசார், சதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, இந்த உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Tragedy Mannargudi police officer loses his life while on duty