அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கட்சி பெரும் புள்ளிகள்! - Seithipunal
Seithipunal


ஆம் ஆத்மி கட்சி தமிழக நிர்வாகிகள் 30க்கும் மேற்பட்டோர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில தலைவர் டி.கே தமிழ்நெஞ்சம் தலைமையில், தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆளுமை திறனாலும் தலைமை பண்பாலும் ஈர்க்கப்பட்டு தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் இத பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில தலைவர் டி.கே தமிழ்நெஞ்சம் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு ஆம் ஆத்மி  கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தங்களை பாஜகவில் இணைத்து கொண்டனர்.

அவர்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்வோடு வலிமையான பாரதம், வளர்ச்சி அடைந்த தமிழகம் என்ற நமது குறிக்கோளை நோக்கி அயராது உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆன் ஆத்மி கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில தலைவர் டி.கே தமிழ்நெஞ்சம் தலைமையில்  30-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu Aam Aadmi Party executives joined BJP


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->