இனி ரூ.22,000... தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அரசாணை!
Tamil Nadu state government to freedom fighters
தமிழக அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.21,000 லிருந்து ரூ.22,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 லிருந்து ரூ.12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஆகஸ்ட் 15, 2025 முதல் அமலுக்கு வருகிறது.
சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசாணையில், “முதல்வரின் அறிவிப்பின் படி, ஓய்வூதியத் தொகையில் மாற்றம் செய்யப்படுகிறது. விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ரூ.22,000 மற்றும் குடும்பங்களுக்கு ரூ.12,000 வழங்கப்படும். இதனால் கூடுதலாக ரூ.27,63,750 செலவாகும். அதற்கான நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், சுதந்திரத்திற்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த போராட்ட வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த முடிவு சமூகத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
English Summary
Tamil Nadu state government to freedom fighters