உ.பி.-யில் ஓநாய் தாக்கியதில் 02 சிறுமிகள் பலி, 09 பேர் காயம்: 'ஆபரேஷன் ஓநாய்' நடவடிக்கை..! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஓநாய் தாக்குதலால் சிறுமியர் இருவர் பலியாகியுள்ளதோடு, 09 பேர் காயமடைந்ததுள்ளனர். இந்த சம்பவங்கள் கிராம மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.யின் பஹ்ரைச் மாவட்டத்தின் கைசர்கஞ்ச் மற்றும் மஹ்சி தாலுகாக்களில் இந்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த 20 நாட்களில் மொத்தம் 11 ஓநாய் தாக்குதல் சம்பவங்கள் இப்பகுதியில் நடந்துள்ளன. 

இந்த சம்பவத்தில் 02 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கடந்த செப்டம்பர் 09-ஆம் தேதி, ஜோதி என்ற நான்கு வயது சிறுமியை ஓநாய் ஒன்று துாக்கிச்சென்றுள்ளது. மறுநாள் அந்த சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து,  செப்டம்பர் 11-ஆம் தேதி, மூன்று மாதக் குழந்தை சந்தியா தனது தாயின் மடியிலிருந்தபோது, ஓநாய் துாக்கிச்சென்றுள்ளது. மறுநாள் அந்த குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் இவ்வாறான சம்பவங்களில் 09 சம்பவங்களில் 09 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இது குறித்து தேவிபதன் பிரிவின் வனப்பாதுகாவலர் சிம்ரன் தெரிவித்துள்ளதாவது:

ஓநாய் தாக்குதலுக்குட்பட்ட பகுதிகளில், போலீஸ், வன அதிகாரிகள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த நிபுணர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் விலங்குகளைக் கண்காணிக்கவும் பிடிக்கவும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அங்கு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும்,  வெப்ப ட்ரோன்கள், இரவிலும் தெளிவாக பார்க்கும் வகையிலான கேமராக்களுடன் இவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், கிராமவாசிகள் குண்டாந்தடிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். டிரோன் மூலம் கண்காணித்த வனத்துறை இரண்டு ஓநாய்கள் சுற்றி வருவதை உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால் அவற்றைப் பிடிக்கவில்லை என்றும், கடந்தாண்டும் இதே பகுதியில் ஒரு ஓநாய் கூட்டம் 09 பேரைக் கொன்று விட்டது. மேலும் பலரை காயப்படுத்தியது. இதைத் தொடர்ந்து 'ஆபரேஷன் ஓநாய்' என்ற நடவடிக்கையை மாநில அரசு தொடங்கியது. தற்போது மீண்டும் அதேபோன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என்று வனப்பாதுகாவலர் சிம்ரன் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

02 girls killed and 09 injured in wolf attack in UP


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->