உள்நாட்டுப் பாதுகாப்பில் தமிழக போலீஸ் முன்னணி வகிக்கிறது: ATS படையினரை பாராட்டியுள்ள முதல்வர்..!
Tamil Nadu Police is leading the way in internal security CM praises ATS personnel
இந்தியாவிலேயே உள்நாட்டு பாதுகாப்பில், தமிழக போலீஸ் முன்னணி வகிக்கிறது என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். கடந்த1995 -ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பயங்கரவாதிகளால் குறி வைத்து கொல்லப்பட்டனர். இதற்கு மூளையாக செயல்பட்ட நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் மற்றும் நெல்லையைச் சேர்ந்த முஹமது அலி ஆகியோர் தலைமறைவாகினர்.
தேடுதலில் போது அபுபக்கர் சித்திக் மற்றும் முஹமது அலி ஆகிய இருவரும் ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ராயச்சோட்டி என்ற இடத்தில் வைத்து தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஜூலை 01-ஆம் தேதி கைது செய்தனர்.
-hvs5m.png)
இதனை தொடர்ந்து, கடந்த 1998-ஆம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டெய்லர் ராஜா, 28 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜூலை 10) கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; நமது திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்தபின், 2023-ஆம் ஆண்டில், பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் தனிக்கவனம் செலுத்துவதற்காக நுண்ணறிவுப் பிரிவின் கீழ், பயங்கரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்.,) புதிதாக உருவாக்கப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளாக, தமிழக போலீஸ், மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள், அண்டை மாநிலக் போலீஸ் என யாருக்கும் பிடிபடாமல் இருந்த, அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட மூன்று முக்கியத் பயங்கரவாதிகளை, அண்மையில் நமது ATS படையினர் சிறப்பாகச் செயல்பட்டுக் கைது செய்துள்ளனர். உள்நாட்டுப் பாதுகாப்பில் நமது நாட்டிலேயே தமிழக போலீஸ் முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள ATS படையினருக்கும், அவர்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
இந்தக் கைது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து உதவிய கர்நாடக மற்றும் ஆந்திர மாநில போலீசாருக்கும் எமது நன்றிகள். என்று அவருடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
Tamil Nadu Police is leading the way in internal security CM praises ATS personnel