தமிழக பின்னணி பாடகருக்கு ''ஹரிவராசனம் விருது''!
Tamil Nadu playback singer Harivarasanam Award
தமிழக பின்னணி பாடகர் வீரமணிதாசனுக்கு சபரிமலையில் மகர விளக்கு தினமான இன்று ஹறிவராசனம் விருது வழங்கப்படுகிறது.
சபரிமலை சன்னிதானம் அரங்கில் இன்று காலை 8 மணி அளவில் நடைபெற உள்ள விழாவில் பாடகர் பி.கே. வீரமணிதாசனுக்கு ரூ. 1 லட்சம் மற்றும் பாராட்டு பத்திரம் அடங்கிய விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருதை தேவசம் அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் பி.கே. வீரமணிதாசனுக்கு வழங்குகிறார். பி.கே. வீரமணிதாசன் 6000 மேற்பட்ட பக்தி பாடல்களையும் அதில் பெரும்பாலானவை ஐயப்பன் பக்தி பாடல்களையும் பாடியுள்ளார்.
English Summary
Tamil Nadu playback singer Harivarasanam Award