''துணைவேந்தர் நியமனத்தில் தேடுதல் குழு பரிந்துரைத்த பட்டியலில் ஒருவரை தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும்''; தமிழக அரசு கோரிக்கை..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகளுக்கு தேடுதல் குழு பரிந்துரைத்த பட்டியலில் உள்ள ஒருவரை தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தது.

அத்துடன், இந்த வழக்கை மீண்டும் விசாரித்து முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.அதன்படி, உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் முடிவெடுக்கும் வரை எந்த நியமனங்களும் மேற்கொள்ளப்படாது என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தது.

இந்நிலையில், 15 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் இல்லாததால் நிதி ஒதுக்கீடு, கொள்கை முடிவு எடுப்பது உள்ளிட்ட பணிகள் ஸ்தம்பித்துள்ளதாக துணைவேந்தர்கள் நியமிக்க கோரிய மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பதிலளித்து கூறியதாவது;

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அளித்த உத்தரவாதத்தால் துணைவேந்தர்கள் நியமனம் முடங்கியுள்ளதாகவும், இதற்கு தீர்வு காணும் வகையில் தேடுதல் குழு பரிந்துரைத்துள்ள மூன்று பேரில் ஒருவரை தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu government requests to accept search committee recommendation for appointment of Vice Chancellor


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->