கடனில் தத்தளிக்கும் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.133.5 கோடி இலக்கு நிர்ணயித்தது தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


கைத்தறி சங்கங்களுக்கு ஒருங்கிணைந்த விற்பனை வளாகம் அமைத்தால் மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும்!

உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுர பட்டு சேலைக்கு தமிழகம் உட்பட ஆந்திரா, கர்நாடகா போன்ற  மாநிலங்களில் இருந்து ஏராளனோர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். காஞ்சிபுரம் வரும் வாடிக்கையாளர்களை இடைத்தரகர்கள் பலர் ஏமாற்றி போலிப்பட்டு சேலைகளை விற்பனை செய்வதால் கைத்தறி தொழில் செய்யும் கூட்டுறவு சங்கங்களுக்கு விற்பனை பாதிக்கிறது.

மேலும் பட்டுக்கான அங்கீகாரம் சில்க் மார்க் ஏதுமின்றி போலிப்பட்டு சேவைகளை தனியார் பட்டு சேலை கடைகளால் விற்கப்படுகிறது. இதன் காரணமாகவும் கூட்டுறவு சங்கங்கள் பாதிப்படைகின்றன. கடந்த 2020-2021 நிதியாண்டில் 77.5 கோடி ரூபாயும் 2021-2022 ஆம் நிதி ஆண்டில் 100 கோடி ரூபாய்க்கும் கூட்டுறவு சங்கங்கள் விற்பனை செய்துள்ளன. நடப்புவாண்டில் கைத்தறி துறை கமிஷனர் ராஜேஷ் 33 சதவீதம் வரை அதிகாரித்து இலக்கை நிர்ணயித்துள்ளார். இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 கைத்தறி சங்கங்களுக்கு 133.5 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கைத்தறி சங்க நிர்வாகி கூறுகையில் "காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் பத்துக்கும் மேற்பட்ட கைத்தறி சங்கங்கள் நலிந்த நிலையில் உள்ளது மத்திய கூட்டுறவு வங்கியில் உள்ள கடன் அடைக்க முடியாமல் உற்பத்தி பெருக்கம் முதலீடு இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் நிர்ணயத்துள்ள உள்ள இந்த இலக்கை எங்களால் எட்ட முடியாது. 

கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் பட்டு ரகங்களை தொலைக்காட்சியில் விளம்பரம் செய்ய வேண்டும். புதிய பட்டு வடிவமைப்புகளை உருவாக்க வேண்டும். விற்பனையை அதிகரிக்க மார்க்கெட்டிங் கம்பெனியை அணுக வேண்டும். மேலும் கைத்தறி சங்கங்களுக்கான ஒருங்கிணைந்த விற்பனை வளாகம் அமைத்தால் மட்டுமே விற்பனை அதிகரிக்க செய்ய முடியும்" என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu government has set a target to cooperative societies


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->