தமிழக தேர்தல் பரபரப்பு...! - 3 நாட்கள் மதுக்கடைகள் செயல்பாடு நிறுத்தம்...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது. வரும் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களமிறங்கி தங்களின் அதிர்ஷ்டத்தை சோதிக்கின்றனர்.

வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்க 75,097 வாக்குச்சாவடிகள், துணை மையங்களுடன் அமைக்கப்பட உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருக்க, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசார வேகத்தில் இறங்கியுள்ளன. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் முழு உற்சாகத்துடன் மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவை கோருகின்றனர்.

மேலும்,  வேட்பாளர்கள் வீதியோடு வீதி சுற்றி வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, அங்கு செயல்படும் மதுபான கடைகள் 3 நாட்களுக்கு மூடப்பட உள்ளன.

21ஆம் தேதி காலை 10 மணி முதல் 23ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை கடைகளை மூட வேண்டும் என அம்மாநில கலால் துறை உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களை தடுக்கவும், அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu election excitement Liquor shops closed 3 days


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->