சஸ்பெண்ட் மற்றும் பணி நீக்கம்! திருச்செந்தூர் அர்ச்சகர், வாயிற் காவலர்கள் மீது அமைச்சர் ரமேஷ் அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாறுவேடத்தில் ஆய்வு நடத்திய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம், அர்ச்சகர்கள் முறேகடாக ரூ.4,000 வசூலித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக, தவறு செய்தவர்கள் மீது தற்பொழுது மிகக் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அமைச்சர் ரமேஷ் அதிரடியாக மேற்கொண்டுள்ளார்.

அர்ச்சகர் பணியிடை நீக்கம் மற்றும் தடை:

கோவிலின் சண்முகவிலாச மண்டப வாயிலில் வைத்துப் பக்தர்களிடம் முறைகேடாக ரூ.1,000 பணம் பெற்ற அர்ச்சகரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspension) செய்து அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அந்த அர்ச்சகர், இனி கோவிலுக்குள் நுழைந்து எந்தவொரு ஆன்மீகப் பணியும் செய்யக் கூடாது முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடந்தையாக இருந்த வாயிற் காவலர்கள் பணி நீக்கம்:

அர்ச்சகர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, பக்தர்களிடம் கட்டாயப் பண வசூலில் ஈடுபட உடந்தையாகச் செயல்பட்ட 2 வாயிற் காவலர்கள் (Gatekeepers) பணியில் இருந்து அதிரடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனான 'முடிக் காணிக்கை' செலுத்தும் இடத்தில், பக்தர்களை மிரட்டிப் பணம் கேட்ட புகாரில் தொடர்புடைய மேலும் 2 ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

"மன்னிப்பு கடிதம் என்பது பொய்" – அமைச்சர் அதிரடி விளக்கம்:

முன்னதாக, தன்னிடம் ரூ.4,000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்களிடம் அமைச்சர் வெறும் மன்னிப்புக் கடிதம் மட்டுமே வாங்கிக்கொண்டு, அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டார் எனச் சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் முற்றிலும் பொய்யானது என்று அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்:

"அர்ச்சகர்களிடம் நடவடிக்கை எடுக்காமல் வெறும் மன்னிப்பு கடிதம் மட்டும் கேட்கப்பட்டதாகப் பரவும் தகவல் முற்றிலும் வதந்தியாகும். திருச்செந்தூர் முருகன் கோயிலில் என்னிடமே ரூ.4,000 லஞ்சம் வசூலிக்கப்பட்ட விவகாரத்தில் எவ்வித சமரசமும் கிடையாது. ஆன்மீகப் பணியில் முறைகேடு செய்து தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், எவ்வித பாகுபாடும் காட்டாமல் அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை நிச்சயம் பாயும்."

அமைச்சரின் இந்த அடுத்தடுத்த அதிரடி சஸ்பெண்ட் மற்றும் பணி நீக்க நடவடிக்கைகள், கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகளில் ஈடுபடும் மற்ற ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Swift Action at Thiruchendur Temple Minister Ramesh Suspends Priest Sacks Gatekeepers Over Extortion


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->