ஸ்டிக்கருக்கே ஸ்டிக்கர்... பெண்கள் எக்கேடாய்ப் போனால் என்ன? Route முக்கியம்… இல்லையா பிகிலு? அதிமுக விமர்சனம்!
AIADMK Condemn to tvk govt cm vijay
ஸ்டிக்கருகே ஸ்டிக்கர், ஆனால் அதுக்கும் திறப்பு விழா ரத்து, என்னவா இருக்கும் என தவெக அரசுக்கு அதிமுக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக ஐடி விங் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அம்மா ரோந்து வாகனத்திற்கு திமுகவும், தவெகவும் பெயர் மாற்றியதை சுட்டிக்காட்டி அதிமுக ஐடி விங் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில்,"ஸ்டிக்கருக்கே ஸ்டிக்கர்….
ஆனா அதுக்கும் திறப்பு விழா ரத்து….
என்னவா இருக்கும்?" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதன் மற்றுமொரு செய்திக்குறிப்பில், “சிங்கப்பெண்கள் அதிரடிப் படை” துவக்க நிகழ்ச்சியை ரத்து செய்யும் அளவுக்கு அப்படி இன்றைய முதல்வருக்கு அதிமுக்கியமான வேலை என்ன தெரியுமா?
தன் உதவியாளர் ஜெகதீஷ் வீட்டு கிரகப்பிரவேச விழாவை சிறப்பித்து இருக்கிறார்…
அதாவது, தமிழகப் பெண்களின் பாதுகாப்பை விட தன் உதவியாளர் வீட்டில் பால் காய்ச்சுவது தான் இன்றைய முதல்வருக்கு முக்கியம்..!!
பெண்கள் எக்கேடாய்ப் போனால் என்ன?
Route முக்கியம்… இல்லையா பிகிலு?
பொய்க்கால் குதிரை அரசு (பி.கு: புது ஆட்சி, புது வீடு…. Route செழிப்பா இருக்கு போலையே..!!) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
AIADMK Condemn to tvk govt cm vijay