தகுதி நீக்க செய்யும் அந்த சட்டமே இருக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு!
Supreme Court Rahul Gandhi MP Post Disqualification issue
எம்பிக்கள், எம்எல்ஏக்களை தகுதி நீக்க செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் "திருடர்கள்" என்று அவதூறாக பேசிய வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராகுல்காந்தி மீதான இந்த நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட நாட்டின் பல எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து, ஆளும் பாஜகவை விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த சட்ட பிரிவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆபா முரளிதரன் என்பவர், இன்று உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்க செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவை எதிர்த்து பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

குறிப்பிட்ட சாதியை இழிவுபடுத்திய வழக்கில், நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டதால், எம்பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த சட்டப்பிரிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
English Summary
Supreme Court Rahul Gandhi MP Post Disqualification issue