பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிப்பதில் என்ன மத நம்பிக்கை உள்ளது? - உச்ச நீதிமன்றம் கேள்வி! - Seithipunal
Seithipunal


டெல்லி மற்றும் தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் (NCR) காற்று மாசுபாட்டை அதிகரிக்கும் பட்டாசு வெடித்தல், விவசாயக் கழிவுகளை எரித்தல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், குறைந்த நேரங்களில் மட்டுமே பட்டாசுகளைப் பயன்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், கடைகளில் விற்கப்படும் பட்டாசுகளை தீவிரமாகக் கண்காணிப்பதோடு, குறைந்த அளவிலான மாசுபாட்டை ஏற்படுத்தும் பசுமைப் பட்டாசுகளை மட்டும் அனுமதிக்கலாம் என்றும்; விளக்குகள் மற்றும் கம்பி மத்தாப்புகளைப் பயன்படுத்தும் பாரம்பரியக் கொண்டாட்ட முறைகளுக்கு மக்கள் திரும்புவது அவசியம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

அப்போது வாதிட்ட வழக்கறிஞர் ஒருவர், "ஆரோக்கியத்திற்கும் மத நம்பிக்கைக்கும் இடையிலான சமநிலையைப் பேண வேண்டும்" எனக் குறிப்பிட்டதற்கு, "பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிப்பதில் என்ன மத நம்பிக்கை இருக்கிறது?" என்று நீதிபதி ஜாய்மால்யா பாக்சி கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி சூர்யகாந்த், "நாங்கள் யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை. அதேவேளையில், இந்த விவகாரத்தில் ஒரு சமநிலையான அணுகுமுறை இருக்க வேண்டும். அரசின் விழிப்புணர்வும், மக்களின் சுயப் பொறுப்பும் சேரும்போது சமூகமே விழிப்புணர்வு பெற்றுத் தாமாகவே பட்டாசு வெடிப்பதைக் குறைத்துக் கொள்ள முன்வரும்" என்று தெளிவுபடுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supreme Court Questions Religious Beliefs Behind Crackers During Festivals


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




சினிமா

Seithipunal
--> -->