வாக்குறுதிகளை மறந்துவிட்டு போராட்டத்தை முடக்குவதா...? பன்னோக்கு மருத்துவப் பணியாளர்கள் விவகாரத்தில் கொந்தளித்த உதயநிதி...! - Seithipunal
Seithipunal


பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருந்த பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களை வீட்டுக்காவலில் வைத்ததற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபடுவோருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராகப் போராடுவதற்காக டெல்லி செல்லும் இளைஞர்களை ஆங்காங்கே கைது செய்யும் போக்கைப் போலவே, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் போராட்டம் நடத்த வரவிருந்த பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களையும் பல்வேறு இடங்களில் வீட்டுக்காவலில் வைக்கும் அரசின் செயல்பாடு கண்டனத்துக்குரியது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மருத்துவப் பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எல்லாம் மறந்துவிட்டு, போராட்டத்துக்குப் புறப்படுவதற்கு முன்பே அவர்களை வீடுகளில் முடக்கிக் கைது செய்யும் அளவுக்கு அரசு செயல்படுவது ஏன்?

விவசாயிகள், மாணவர்கள், செவிலியர்கள் என ஜனநாயக வழியில் தங்களது உரிமைகளுக்காகப் போராடும் எந்தத் தரப்பினரையும் நேரில் அழைத்துப் பேசி தீர்வு காணாமல், அடக்குமுறையை ஏவிவிடுவதுதான் மாற்றமா?

மருத்துவத் துறையின் முதுகெலும்பாக விளங்கும் பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண முதல்-அமைச்சர் முன்வர வேண்டும். பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பதிவில் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Forgetting promises and calling off protest Udhayanidhi who upset over issue of multi disciplinary medical workers


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->