பிரதமர் மோடி முன்னிலையில் ஆங்கிலத்தில் அசத்திய முதல்வர் விஜய்...! பாராட்டித் தள்ளிய ப.சிதம்பரம்...! - Seithipunal
Seithipunal


சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று நடைபெற்ற மத்திய அரசின் நலத்திட்டப் பணிகள் தொடக்க விழாவில், பிரதமர் மோடி முன்னிலையில் முதல்-அமைச்சர் விஜய் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவரது பேச்சு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தின் இரு மொழிக் கொள்கை வெறும் அறிவிப்பாக இல்லாமல், பள்ளிகள் தோறும் முறையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்துக்கான பல்வேறு நலத்திட்டப் பணிகளை மத்திய அரசு சார்பில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்றது.

இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் விஜய், தமிழகம் இந்தியாவின் பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு நீண்டகாலமாக அடித்தளமாக விளங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.மேலும், மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும்போது, அதன் பயன்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடியாகப் பிரதிபலிக்க வேண்டும் என்பதே தங்களது அணுகுமுறை என்றும் அவர் தெரிவித்தார்.

விஜய்யின் ஆங்கில உரை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,"இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தமிழக அரசின் முதல்-அமைச்சர் விஜய் ஆங்கிலத்தில் பேசுவதைக் கேட்டேன். அவர் சரளமாக ஆங்கிலம் பேசுவதுடன், சொற்களையும் சரியாக உச்சரிக்கிறார்.

இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.இரு மொழிக் கொள்கையை ஆதரிக்கும் அனைவரும், குறிப்பாக இளம் மாணவர்கள், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சரளமாகப் பேசவும், சொற்களைத் தெளிவாக உச்சரிக்கவும் வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் தகுந்த பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்களும் ஆங்கில ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும். இரு மொழிக் கொள்கை வெறும் ஏட்டளவில் மட்டும் நின்றுவிடக் கூடாது. அது தமிழகம் முழுவதும் பள்ளிகளில் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என்று ப.சிதம்பரம் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Vijay English fluency presence of Prime Minister Modi P Chidambaram praised him


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->