அமலுக்கு வந்தது ஞாயிறு ஊரடங்கு.. வெறிச்சோடி காணப்படும் வீதிகள்..! - Seithipunal
Seithipunal


இன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் பரவ ஆரம்பித்த கொரோனா ருத்ரதாண்டவம் ஆடியது. ஊரடங்கு,  தடுப்பூசி என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிகைகளை மூலம் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொடர்ந்து அதிக அளவில் பரவி வரும் நிலையில், மீண்டும் ஊடரங்கை அமல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி, கடந்த 6-ந்தேதி முதல் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

இதனை அடுத்து, இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அத அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து பொதுப்போக்குவரத்து, மெட்ரோ ரெயில் போன்றவை செயல்படாது. அதே நேரத்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு அனுமதி உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், டாஸ்மாக் ஆகியவை திறக்கப்படாது அதே நேரத்தில் உணவங்களில் பார்சலுக்கு அனுமதி உண்டு.

தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sunday Lockdown


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->